பேணுதலான வாழ்வே பயனுள்ள வாழ்வு
كان فضيل بن عياض رحمه الله يقول: لا خير في فقه لا ورع فيه كما لاخير في صلاة لا خشوع فيها ‘ ولا مال لا جود فيه . ( الكتاب تنبيه المغترين للإمام شعراني صفحة: ١٩٨ ) புழைல் இப்னு இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: அச்சமில்லாத தொழுகையில் எந்த சிறப்பும் இல்லாதது போன்றும் தர்மம் கொடுக்காத செல்வத்தில் எந்த சிறப்பும் இல்லாதது போன்றும் பேணுதல் இல்லாத மார்க்க கல்வியிலும் எந்த சிறப்பும் இல்லை. ( பேணுதலில் உறுதிமிக்கவர்) أن أبا عبد الله الحارث بن اسد المحاسبي ورث من ابيه سبعين ألف درهم فلم يأخد منه شيئا قيل لأن أباه كان يقول بالقدر فرأى من الورع أن لا يأخد من ميراثه شيئا ان النبي صلى الله عليه وسلم لايتوارث أهل ملتين شيئا ( الكتاب: رسالة القشيرية صفحة: 57 ) அபூ அப்துல்லாஹ் அல்ஹாரிஸ் பின் அல் முஹாசிபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் : தன் தந்தையிடமிருந்து எழுபதாயிரம் திர்ஹம் தொகைக்கு வாரிசாக இருந்தும் அவற்றிலிருந்து ஒரு திர்ஹத்தை கூட அன்னார் எடுத்துக் கொள்ளவில்லை. அ...